தமிழர் தலைநகரின் வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து: இலட்சக்கணக்கான சொத்துக்கள் தீக்கிரை!(காணொளி)
இரண்டாம் இணைப்பு
திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று (01) ஏற்பட்ட தீ விபத்தில் வைத்தியசாலை உபகரணங்கள் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திடீர் மின்னொழுக்கினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதில் பல தரப்பட்ட மருந்துப் பொருட்கள், ஆய்வு கூட உபகரணங்கள் பல இலட்சக்கணக்கான சொத்துக்கள் தீக்கிரையாகியுள்ளன.
திருகோணமலை தீயணைக்கும் பிரிவு, முள்ளிப்பொத்தானை திஸ்ஸபுர இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
முதலாம் இணைப்பு
திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று (01) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகளே தீப்பற்றி உள்ளன.
இன்று காலை 6 மணியளவில் சத்தமொன்று கேட்டதாகவும் பின்னர் தீப்பற்றியதாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.
காவல்துறையினர் விசாரணை
தீ விபத்தில் வைத்தியசாலையில் உள்ள நோயாளர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை எனவும் விபத்து ஏற்பட்டமைக்காண காரணம் இதுவரையில் தெரியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பற்றி எரியும் தம்பலகாமம் வைத்தியசாலை!!!🏥 pic.twitter.com/rDJ5LAiFFy
— 🇸🇭🇪🇷🇴🇳 (@sheron_hyn) October 1, 2023