கொழும்பு BOC தலைமையகத்தில் தீ விபத்து
The Bank of Ceylon
Fire
Sri Lanka Banks
By Thulsi
கொழும்பு (Colombo) - கோட்டையில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் தலைமையகத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இலங்கை வங்கி (BOC) தலைமையகத்தின் ஐந்தாவது மாடியில் நேற்றிரவு 8.30 மணியளவில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தின் போது ஐந்தாவது மாடியில் ஊழியர்கள் சிலர் பணியாற்றிக் கொண்டிருந்த போதும் எதுவித காயங்களும் இன்றி அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம்
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட தீயணைப்புப் படையினர் களத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில் சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
6 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்