மழைக்கு மத்தியிலும் இரவுநேரம் பற்றியெரிந்த கடைகள்
மஹாவெவ நகரில் உள்ள புடைவைக் கடையொன்றில் ஏற்பட்ட தீயினால் இன்று (23ஆம் திகதி) இரவு அதே வணிக வளாகத்தில் உள்ள மேலும் பல கடைகளும் எரிந்து நாசமாகியுள்ளதாக மஹாவெவ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அதே கட்டிடத்தில் அமைந்துள்ள ஜவுளிக்கடையில் தீ பரவியதாகவும், பின்னர் படிப்படியாக மற்ற கடைகளுக்கும் பரவியதாகவும், கடை வளாகமும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஐந்து கடைகள் முற்றாக எரிந்து நாசம்
இதுவரை ஐந்து கடைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். ஹலவத்தை தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை அணைத்ததாகவும், மஹாவெவ, மாதம்பே மற்றும் மாரவில காவல் நிலையங்களின் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதாகவும் ஹலவத்த சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தீ பரவும் போது பலத்த மழை பெய்து கொண்டிருந்த நிலையிலும் மழையின் நடுவே தீ பரவியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா
