ஐந்து தற்காலிக அமைச்சர்களை நியமித்த அதிபர் ரணில்!
ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ பயணத்தினை இன்று (27) அதிகாலை மேற்கொண்டுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க, தான் நாட்டில் இல்லாத காலப்பகுதியில் தனது பணிப்புரைக்கு உட்பட்ட அமைச்சுக்களின் பொறுப்புக்களை கண்காணிப்பதற்காக ஐந்து பதில் அமைச்சர்களை நியமித்துள்ளார்.
அதன்படி, பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சராக இருக்கும் பிரமித பண்டார தென்னகோனையும், இராஜாங்க அமைச்சரான ஷெஹான் சேமசிங்கவை பிரதி நிதி அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் அனுபா பஸ்குவல் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பிரதி அமைச்சராகவும், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, முதலீட்டு ஊக்குவிப்புக்கான பதில் அமைச்சராகவும் பணியாற்றுவதற்காக அதிபரினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
தலைவர்கள் உரையாடல்

அதிபர் ரணில் விக்ரமசிங்க நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்களும் (28-29) ஜெர்மனியில் நடைபெறவிருக்கும் 'பேர்லின் குளோபல் டயலாக்' நிகழ்வின் போது தலைவர்கள் உரையாடல் அமர்வில் ஆரம்ப உரையை நிகழ்த்தவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அவர் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் மற்றும் ஜேர்மன் கூட்டாட்சிக் குடியரசின் அதிகாரிகளுடன் இருதரப்பு அமர்வில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.