நபர் ஒருவரை கடத்தி படுகொலை! அதிரடியாக கைது செய்யப்பட்ட ஐவர்
ஒருவரைக் கடத்தி கொலை செய்தது தொடர்பாக, காவல்துறை விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் நேற்று (25) ஐந்து சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.
கடந்த 22ஆம் திகதி மட்டக்குளிய காவல்துறை பிரிவில் ஒருவரைக் கடத்தி, கழுத்தை நெரித்துக் கொன்று, நீரில் மூழ்கடித்த குற்றத்தில் சந்தேக நபர்கள் ஈடுபட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்படி, ஜெயவர்தனபுர முகாமில் உள்ள விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு மட்டக்குளிய காவல் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
சந்தேக நபர்கள் கொழும்பு 15 மற்றும் பமுனுகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் வயது 23 முதல் 36 வரை இருக்கும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (26) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மட்டக்குளிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்