கரூர் படுகொலையில் தலையிடுமா மோடி அரசு - களத்தில் நிர்மலா சீதாராமன்
கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) தெரிவித்துள்ளார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இது தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் விஜய் பிரசாரம் செய்த இடத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமன் ஆய்வு செய்தார். அவர் அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். இதன்போது அவருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மிகவும் பரிதாபமான நிலைமை
கூட்ட நெரிசலால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தனர்@nsitharaman @DrLMurugan #KarurStampede #DDTamilNews pic.twitter.com/vGZTDqu9hd
— DD Tamil News (@DDTamilNews) September 29, 2025
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது “கரூரில் நடந்தது அதிர்ச்சி சம்பவம். பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்ததால் ஏற்பட பாதிப்புதான் இந்த நெரிசல். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள்.
தங்களது உறவினர்களை இழந்து அவர்கள் கதறி அழுவதை பார்க்க முடியவில்லை. அவர்களிடம் வார்த்தைகளால் ஆறுதல் கூற முடியவில்லை. மிகவும் பரிதாபமான நிலைமை.
இனி இதுபோன்று ஒரு சம்பவம் நாட்டில் நடக்கக்கூடாது. சம்பவம் அறிந்து பிரதமர் மோடி கரூர் வருவதாக கூறினார்.
குற்றம் சாட்ட விரும்பவில்லை
ஆனால் பல்வேறு காரணங்களால் அவரால் வர முடியவில்லை. ஆகவே மத்திய அரசு சார்பில் நாங்கள் வந்துள்ளோம்.
இந்த சம்பவத்தில் எந்த ஒரு கட்சியையும் குறிப்பிட்டு பேச விரும்பவில்லை. யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை.
கட்சி சார்பில் விமரசனங்களை முன் வைக்க நான் வரவிலை. யார் மீது தவறு என்பதை நிர்ணயிக்க எனக்கு அதிகாரம் இல்லை. கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
