முட்டை விலை குறைந்தும் குறையாத உணவு விலை : வாடிக்கையாளர் அதிருப்தி
Economy of Sri Lanka
Egg
Fast Food
By Sumithiran
முட்டை(egg) விலை குறைந்தாலும், முட்டைப் அப்பம் மற்றும் முட்டை ரொட்டி விலை குறையாததால், வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
முட்டையின் விலை 25 - 30 ரூபாவிற்கு கீழ் குறைந்துள்ள போதிலும் முட்டை அப்பம் மற்றும் முட்டை ரொட்டி ஆகியவற்றின் விலை முன்பைப் போலவே இருப்பதாகவும்,அவர்கள் தெரிவிக்கின்றனர்.
உடன் உயர்த்தப்படும் உணவுப்பொருள் விலை
முட்டை விலை அதிகரிக்கும் போது இந்த உணவுப் பொருட்களின் விலை உடனடியாக உயர்த்தப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
ஒரு முட்டையின் விலை 58 முதல் 60 ரூபாய் வரை இருந்தபோது, முட்டை அப்பம் மற்றும் முட்டை ரொட்டி 130 முதல் 140 ரூபாய் வரை உயர்ந்தது. ஆனால் தற்போதும் அதே விலையிலேயே விற்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி