தோல்வி நிச்சயம்! ஈரான் ஜனாதிபதியின் பகிரங்க அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரானைச் சரண் அடைய வற்புறுத்தும் எந்தவொரு முயற்சியும் தோல்வியிலேயே முடியும் என்று அந்நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் அறிவித்துள்ளார்.
அத்தகைய அணுகுமுறையை ஈரானிய தேசம் ஒருபோதும் ஏற்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை அன்று தெஹ்ரானின் அவசரகால சேவை அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், ஈரான் போரையோ அல்லது பிராந்தியத்தில் நிலையற்ற தன்மையையோ விரும்பவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
மீண்டும் பேச்சுவார்த்தைகள்
மாறாக, பல்வேறு நாடுகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் மற்றும் சுமுகமான உறவுகளை மேற்கொள்ளவே ஈரான் எப்போதும் முன்னுரிமை அளித்து வருவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த இரண்டு நாட்களில் பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், பெசெஷ்கியனின் இந்த உரை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தை குறித்து ஈரான் அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |