பிச்சையெடுக்கும் போராளிகள்! நலன்புரிச்சங்கத்தின் தேவை என்ன..!
பிச்சையெடுக்கும் நிலைமையில் இன்று போராளிகள் இருக்கிறார்கள் என்கிறார் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் இணைப்பாளர் செல்வநாயம் அரவிந்த்.
எமது ஊடகத்தின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்த போது இதனைத் தெரிவித்த அவர், அரசியல்வாதிகள் அவர்களை வாக்கு வங்கிக்காக பயன்படுத்துகின்றார்கள் என குற்றம் சுமத்தியுள்ளார்.
போராளிகள் நலன்புரிச் சங்கம் என்பது கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னரே நிறுவப்பட்டிருக்க வேண்டும். சிறைச்சாலையில் இருந்த போர் கைதிகள் தீவிரமான கண்காணிப்பின் கீழ் இருக்கின்றார்கள்.
மீண்டெழ முடியாத நிலைமை
13000 - 15000 வரையிலான முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களில்லை ஆயிரம் இரண்டாயிரம் பேருக்கான உதவிகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. ஏனையவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
முன்னாள் போராளிகள் மீண்டெழ முடியாத ஒரு நிலைமையை அரசியல்வாதிகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது ஒரு சங்கமாக இயங்குகிறது.
எங்களுடைய போராளிகளை பல கட்சிகளும் இணைந்திருக்கின்றன. ஆனால் இந்த போராளிகளுக்கு அங்கு இடம் வழங்கப்பட்டு இருக்கின்றதா என்றால்? இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அவர்களை பயன்படுத்துகின்றார்கள் என செல்வநாயம் அரவிந்த் கூறுகிறார்.
முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலை, நலன்புரிச் சங்கத்தின் தேவை, அரசியல் வெளிப்பாடு என அவர் பகிர்ந்துகொள்ளும் விடயங்களை காணொளியில் காண்க,
பகுதி - 1
பகுதி - 2