முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு விளக்கமறியல்
புதிய இணைப்பு
முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நகரங்களை ஆராய்க இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், அந்த ஆணைக்குழு முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம அதிரடி கைது!
முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்றையதினம் (07) அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.
இந்த நிலையில், விசாரணை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட நீண்ட நேர விசாரணைகளைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர், கொழும்பு இலக்கம் 11 மேல்நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |