5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை...! வெளியான அறிவிப்பு
Sri Lanka
Department of Meteorology
Climate Change
Weather
By Shalini Balachandran
பல மாவட்டங்களுக்குப் புதிய மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையானது இன்று (07-10-2026) இரவு 7:00 மணி முதல் நாளை (08-10-2026) இரவு 7:00 மணி வரையிலான 24 மணித்தியால காலப்பகுதிக்குச் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கைகள்
நிலவும் மழையுடனான வானிலை காரணமாகப் பல பிரதேசங்களுக்கு இரண்டு மட்டங்களிலான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
செம்மஞ்சல்/Amber)
- பதுளை மாவட்டம்: பசறை பிரதேசம்
- கேகாலை மாவட்டம்: மாவத்தகம மற்றும் ருவன்வெல்ல பிரதேசங்கள்

(மஞ்சள்/Yellow)
- களுத்துறை மாவட்டம்: வலல்லாவிட்ட
- கண்டி மாவட்டம்: உடுதும்பரை
- கேகாலை மாவட்டம்: தெஹியோவிட்ட மற்றும் கேகாலை
- இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி, எஹெலியகொடை, அயகம, வெலிகேபொல மற்றும் குருவிட்ட
குறிப்பிட்ட பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் அவசர மண்சரவு நிலைமைகள் அல்லது மண்மேடுகள் சரிந்து விழுவது தொடர்பில் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |