மாத்தறை கடற்பகுதியில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் :படைத்தரப்பிற்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்
மாத்தறை, மிரிஸ்ஸ கடற்பகுதியில் நேற்று (28) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டுச் சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்ட சுமார் 400 கோடி ரூபா பெறுமதியான 346 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருள் கடத்தல்காரரான 'அம்பகஹவத்த சரத்' என்பவருடையது என பாதுகாப்பு தரப்பினர் சந்தேகிக்கின்றனர்.
அத்துடன், 'தெஹிபலே' என்ற போதைப்பொருள் கடத்தல்காரர், உரிய போதைப் பொருட்களை கடல் மார்க்கமாக கரைக்கு கொண்டு வருவதற்கு சம்மதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கிடைத்த இரகசிய தகவல்
மிரிஸ்ஸ கடற்பகுதியை அண்மித்த டிங்கி படகு ஒன்று ஐஸ் போதைப்பொருள் ஏற்றிச் செல்வதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் சிறிலங்கா கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களம், காவல்துறை விசேட அதிரடிப்படை மற்றும் இலங்கை விமானப்படையினர் இணைந்து நேற்று (28) இந்த சோதனையை மேற்கொண்டனர்.

கரைக்கு வந்த கப்பலில் இருந்து போதைப் பொருட்களை இரண்டு வான்களில் ஏற்றிக் கொண்டிருந்த போது பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தை சோதனையிட்டனர்.
மிரிஸ்ஸ மற்றும் பெலியத்த பிரதேசத்தில் வசிக்கும் டிங்கி படகில் தப்பிச் செல்ல முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வான்களின் சாரதிகள் தப்பிச் சென்றுள்ளதுடன், போதைப்பொருள் கடத்த வந்த 19 வயதுடைய பெண் ஒருவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
மட்டக்குளிய பிரதேசத்தை சேர்ந்த இவர், திருமணமான கணவர் சிறையில் இருக்கும் வேளையில் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த நபர் ஒருவரின் ஊடாக இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு வான்கள்
போதைப்பொருளை மறைத்து வைக்கும் இரகசியப் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், கைது செய்யப்பட்ட இரண்டு வான்களில் ஒன்று போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இரண்டு வான்களில் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 16 பைகளிலும், டிங்கி படகில் 17 பைகளிலும் 346 கிலோ எடையுள்ள கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கையிருப்பை பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ ஆகியோர் இன்று (29) பிற்பகல் அவதானித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் காவல்துறைபோதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
