யாழ். திருநெல்வேலியில் நடந்த துணிகர கொள்ளை - காவல்துறையின் அதிரடி
யாழ். திருநெல்வேலியில் உள்ள வர்த்தக நிலையத்தை உடைத்து பொருட்களை திருடிய சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் காவல்துறையினரால் சம்பவம் தொடர்பாக 19, 27, 30 மற்றும் 32 வயதுடைய சந்தேகநபர்கள் நால்வர் இன்றையதினம் (26.09.2025) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வர்த்தக நிலையமானது நேற்று முன்தினம் இரவு உடைக்கப்பட்டு 27 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டிருந்தன.
காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
இந்நிலையில் வர்த்தக நிலைய உரிமையாளர் இது குறித்து கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
அந்தவகையில் விரைந்து நடவடிக்கை எடுத்த கோப்பாய் காவல்துறையினர் இன்றையதினம் குறித்த சந்தேகநபர்கள் நால்வரையும் கைது செய்ததுடன் களவாடிய பொருட்களையும் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

