30,000 மாணவர்களை உள்வாங்க திட்டமிட்டுள்ள பிரான்ஸ்! இந்தியர்களுக்கு வழங்கவுள்ள அங்கீகாரம்
அதிகளவான இந்திய மாணவர்களை பிரான்ஸ்க்கு வரவேற்கவுள்ளதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இன்று (26) இடம்பெற்ற இந்தியாவின் குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அதன்படி, எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் சுமார் 30,000 இந்திய மாணவர்கள் பிரான்சுக்கு வரவேற்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
சர்வதேச வகுப்புகள்
பிரெஞ்சு மொழி பேசாத மாணவர்களும் பிரான்ஸ் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து கல்வி கற்பதை சாத்தியமாக்குவதற்காக சர்வதேச வகுப்புகளை உருவாக்கி வருவதாகவும் மக்ரோன் குறிப்பிட்டார்.
அதுமாத்திரமன்றி, பிரான்சில் கல்வி கற்ற மாணவர்கள், பிரான்ஸ் செல்வதற்காக விசா பெறும் நடைமுறையையும் எளிதாக்க இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நட்பை வலுப்படுத்தல்
2030ஆம் ஆண்டாகும் போது, 30,000 இந்திய மாணவர்கள் பிரான்சுக்கு வரவேற்கப்படுவார்கள் என்றும், பிரான்சில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், இரு நாடுகளுக்குமிடையிலான நட்பை வலுப்படுத்துவதுமே தனது குறிக்கோள் என்றும் மக்ரோன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |