யாழில் சீன நிறுவனத்தின் எரிபொருள் விலைக்கழிவுகள் தொடர்பான அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் சீன நிறுவனமான சினோபெக்கின் எரிபொருட்கள் விலைக்கழிவுடன் விற்பனை செய்யப்படுகின்றமை தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில், சினோபெக் நிறுவனத்தின் எரிபொருட்கள் விலைக்கழிவுடன் விற்பனை செய்யப்படுகின்றன.
இதனடிப்படையில் ஒரு லீட்டர் பெற்றோல் 7 ரூபாய் விலைக்கழிவுடன் 358 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றதுடன் டீசல் 3 ரூபாய் விலைக்கழிவுடன் 348 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோலின் விற்பனை வீழ்ச்சி
மேலும் சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் எரிபொருள் விலை குறைப்பு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இலாபத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்தது.

இதற்கமைய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விற்பனை வீழ்ச்சி நேரடியாக அதன் வருமானத்தை பாதித்துள்ளதாகவும் இதனால் எரிபொருள் தேவை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க