யாழ் வடமராட்சியில் இன்றும் பெற்றோலுக்கு நீண்ட வரிசை..!
Fuel Price In Sri Lanka
Jaffna
Sri Lanka Fuel Crisis
By Erimalai
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இன்றும் எரிபொருள் நிரப்புவதற்கு நீண்ட வரிசையில் மக்கள் தமது வாகனங்களுடன் காத்திருக்கின்றனர்.
இதனடிப்படையில், இன்று (03.03.2026) காலை முதல் வடமராட்சியில் எங்கும் எரிபொருள் இல்லாத நிலையில், பிற்பகலிலிருந்து மந்திகை எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மட்டும் எரிபொருள் வழங்கப்படுகிறது.
கிராமக்கோட்டை, குன்சர்கடை மற்றும் துறைமுகம் போன்ற எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் இல்லை, இதனால் மந்திகை எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
எரிபொருள் பதற்றம்
மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் பதற்றம் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், நாட்டில் போதியளவு எரிபொருள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், மக்களை இவ்வாறு தொடர்ச்சியாக வரிசையில் காணக்கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி