ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரின் மர்ம மரணம்: செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட தகவல்
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான அலெக்ஸி நவால்னியின் இறுதிச் சடங்கு தொடர்பில் அவரது செய்தித் தொடர்பாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அலெக்ஸி நவால்னியின் இறுதிச் சடங்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (01) நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ரஷ்ய தலைநகரான மொஸ்கோவின் தென்கிழக்கு மாவட்டமான மேரினோவில் உள்ள தேவாலயத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் அவரது இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புடினின் நிர்வாகம்
ரஷ்ய அரசையும் புடினின் நிர்வாகத்தையும் கடுமையாக விமர்சித்து வந்த நாவல்னி (47), ரஷ்ய ஆர்க்டிக் பிரதேசத்திலுள்ள தொலைதூர சிறையொன்றில் அடைக்கப்பட்டிருந்தார்.
அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நவால்னி சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
கடுமையான விமர்சனம்
அதனை தொடர்ந்து, நவால்னியை புடின் நிர்வாகம் கொன்றுவிட்டதாக சர்வதேச நாடுகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தன.
அத்துடன், அவரது இறப்புக்கான காரணம் தெரியாத நிலையில் நாவல்னியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது இறுதி சடங்கு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |