பொதுத் தேர்தல் : கட்டுப்பணம் செலுத்திய சுயேட்சைக் குழுக்கள்
இலங்கையின் இவ்வருட பொதுத் தேர்தலுக்கு நேற்று (04) வரை 122 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நேற்றைய தினத்தில் மாத்திரம் 36 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.
இதுவரை 22 தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கு சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு
எனினும், நேற்றைய தினம் வரை மாத்தளை தொகுதியில் எந்தவொரு கட்சியும் கட்டுப்பணத்தை வைப்பிலிடவில்லை என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தொகுதிகளுக்கு ஜனசேத பெரமுன கட்சி வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதுடன் மூன்று சுயேட்சைக் குழுக்கள் நேற்று வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளன.
இம்முறை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நேற்று ஆரம்பமானதுடன், எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening