சந்தேகத்திற்கிடமான முறையில் மீட்கப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் சடலங்கள்! காவல்துறையினர் விசாரணை
Sri Lanka Police Investigation
Murder
Teachers
By Dharu
காலி , ஹபரதுவ, பிதிடுவ பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் சகோதரிகள் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சகோதரிகள் இருவரும் பிதிடுவ பகுதியில் உள்ள பெரிய நிலப்பரப்பில் அமைந்துள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாக காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இரு பெண்களின் உடல்களும் அவர்களது வீட்டின் பின்புறத்தில் வெவ்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை புலம்பெயர் தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் - சர்வதேச மன்னிப்பு சபை
ஓய்வுபெற்ற ஆசிரியைகள்
81 மற்றும் 86 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியைகளான சகோதரிகள் இருவரும் திருமணமாகாதவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரட்டைக் கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
சந்தேக நபர்களை அடையாளம் காண ஹபரதுவ காவல்துறையினர் மற்றும் காலி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்