தலைமன்னார் 10 வயது சிறுமி கொலை வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவு இன்று திங்கட்கிழமை (19) மதியம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த 16 ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 52 வயதுடைய சந்தேக நபரை காவல்துறையினர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய 48 மணி நேர காவல்துறை காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.
விளக்கமறியலில் வைக்க உத்தரவு
இந்த நிலையில் குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் திங்கட்கிழமை(19) காவல்துறையினரால் மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |