மீண்டும் நீதிமன்றில் முன்னிலையான ஞானசார தேரர்!
Galagoda Aththe Gnanasara Thero
By Sathangani
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (07) மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
அதற்கமைய ஞானசார தேரர் சற்றுமுன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
மதமொன்றை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு 09 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வழக்கு தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமையவே அவர் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்