தொடர்ந்து குறைவடையும் தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
Gold
By Sathangani
சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளியின் விலை இன்று (23) மீண்டும் குறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் இன்றையதினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,371 டொலராகவும் வெள்ளி ஒரு அவுண்ஸ் 65.62 டொலராகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை பாரிய சரிவை சந்தித்ததையடுத்து கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையிலும் தங்கத்தின் விலை இன்றைய தினம் 8,000 ரூபாயால் குறைந்துள்ளது.
இன்றைய விலை நிலவரம்
அதன்படி இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 370,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதுடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,550 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்