மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: சடுதியாக குறைந்த தேங்காய் விலை
Sri Lanka
Sri Lankan Peoples
Coconut price
By Raghav
கடந்த சில மாதங்களாக 220 ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது, சந்தையில் 100 முதல் 170 ரூபா வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் தேங்காய் விலை வேகமாக சரிந்ததால் தேங்காய் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தேங்காய் விற்பனை
இதனால் தங்கள் வருமானமும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில வியாபாரிகள் அதிக இலாபத்துடன் தேங்காய்களை விற்பனை செய்வதாகவும், அப்போது தேங்காய் விற்பனை குறைந்ததால் வருமான நிலையும் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் தேங்காய் தேவையை பூர்த்தி செய்வதில் நிலவும் தொடர்ச்சியான சிரமங்களுக்கு நீண்டகால தீர்வாக 40,000 ஏக்கர் புதிய தென்னை தோட்டங்களை பயிரிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
