நகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
Gold Price in Sri Lanka
Today Gold Price
Gold
By Thulsi
உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இலங்கையில் இன்று (16) தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது.
அந்தவகையில் இலங்கையில் இன்று தங்கத்தின் விலை 1000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
திடீர் விலை வீழ்ச்சி
அதன்படி, நேற்றையதினம் 394,000 ரூபாவுக்கு காணப்பட்ட 24 கரட் தங்கம் (ஒரு பவுன்) இன்று 1000 ரூபாவால் குறைவடைந்து 393,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 362,400 ரூபாவுக்கு காணப்பட்ட 22 கரட் தங்கம் (ஒரு பவுன்) இன்று 1000 ரூபாவால் குறைவடைந்து 361,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் விலை வீழ்ச்சி, இலங்கையிலும் தங்கத்தின் விலை குறையக் காரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி