தமிழ் பொதுவேட்பாளரைக் காண்பித்து பெட்டிகளுக்கு விலைபேசும் தலைவர்கள் !!!
வருகின்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு தமிழ் மக்கள் சார்பாக ஒரு பொது தமிழ் வேட்பாளரை நிறுத்தி உலகிற்கு தமிழ் மக்களின் நிலைப்பாடுகளையும் மற்றும் நியாயங்களையும் எடுத்துரைப்பது என்கின்ற தமிழ் பொது அமைப்புக்களின் முயற்சியில் ஆரம்பத்தில் குத்தி முறித்துக்கொண்டு நின்றார்கள் சில அரசியல் தலைவர்கள்.
“இதுவே தமது நிலைப்பாடு” என்று அடித்துப் பிடித்துக்கொண்டு அறிக்கைகளையெல்லாம் விட்டுத்தள்ளியிருந்தார்கள்.
'அட இவர்களுக்கெல்லாம் தமிழ் மக்கள் மீது அக்கறை வந்துவிட்டது என்று நினைத்து வியந்து மகிழ்வதற்கு முன்னதாகவே எதிர்மாறான மற்றொரு செய்தி காதுகளில் விழுகின்றது.
சுயநிர்ணய உரிமை
“தென்னிலங்கைத் தலைவர்களுடன் இரகசியமாக சில தமிழ் தலைவர்கள் பேரம்பேசி வருவதாக”
அவர்கள் பேசி வருகின்ற பேரம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை சம்பந்தமான பேரம் என்றோ அல்லது தமிழ் மக்களின் வாழ்க்கை சம்பந்தமான பேரம் என்றோ நீங்கள் நினைத்தால் உங்களைவிட முட்டாள்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
தங்களுக்கான பெட்டி பேரத்தைத்தான் அவர்கள் பேசி வருகின்றார்களாம்.
சும்மாவே ஒரு தேர்தலுக்கு இரண்டு மூன்று பெட்டிகள் வாங்கிப் பதுக்கும் இந்தத் தலைவர்கள் தற்பொழுது கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ள தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தை முன்நிறுத்தி ஐந்து ஆறு பெட்டிகள் வரை சிரித்துக்கொண்டு கேட்கின்றார்களாம்.
தமிழர்களுடைய “பெறுமதி” வாறவன் போறவனுக்கெல்லாம் தெரியுது ஆனால் தமிழ் மக்களுக்கு மட்டும் எப்பொழுது தெரியப் போகின்றதோ தெரியவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |