ஜெனிவாவில் தப்பிக்க இந்தியாவை வளைக்கும் கோட்டாபய - வெளிப்படுத்திய ஆங்கில ஊடகம்

india geneva gotabaya
By Jaso Jan 17, 2022 12:56 AM GMT
Report

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்வரும் அமர்வில் இலங்கைக்கு பாதகமான நிலை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அரச தலைவர் கோட்டாபய இந்தியாவின் ஆதரவுடனான இனநல்லிணக்க முயற்சிகள் குறித்து அறிவிக்கவுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை நிகழ்த்தும்போது அரச தலைவர் கோட்டாபய, இந்தியாவின் ஆதரவுடனான நல்லிணக்க முயற்சிகளை ஆரம்பிக்கவுள்ளதாக வாக்குறுதி வழங்குவார். அவரின் உரையின் முக்கிய விடயமாக இதுவே காணப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கம் அறிவிக்கவுள்ள நல்லிணக்க திட்டத்திற்கான வரையறைகளை உருவாக்கும் முயற்சிகள் தற்போது இடம்பெறுகின்றன-பொதுவான உடன்படிக்கைகளில் உள்ள சிக்கல்களை ஆராயவேண்டியுள்ளது. இலங்கையின் அரசியல் தலைவர்கள் பரந்துபட்ட உறுதிமொழிகளை வழங்கியுள்ள 13வது திருத்தம் தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது- இந்திய தலைவர்களும் இதனை அங்கீகரித்துள்ளனர். இதற்கு முன்னோடியாக இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு இந்த விடயத்தில் ஆதரவு கிடைத்துள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கு நிதி மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளது. தற்போது கிடைத்துள்ள புதிய சாதகமான சூழ்நிலை காரணமாக – ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவது ஆதரிப்பதன் மூலம் -இலங்கைக்கு உதவுவது தொடர்பில் தமிழ்நாட்டில் காணப்படும் விமர்சனங்களை தவிர்க்க கூடிய சாதகமான நிலை புதுடில்லிக்கு கிடைக்கும்.

எனினும் எவ்வாறான விடயங்களிற்கு தீர்வை காணவேண்டும் என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டில்நடைபெற்ற தேர்தலில் நான்கு ஆசனங்களை வென்ற பா.ஜ.க இலங்கை தமிழர்களின் தீர்க்கப்படாத கோரிக்கைகளிற்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதன் மூலம் மாநிலத்தில் அதன் நிலையை மேலும் மேம்படுத்த முயலும் என கருதுகின்றது.

தமிழ்கட்சிகள் பொதுவான நிலைப்பாட்டை முன்வைக்கவேண்டும் – அதன் மூலம் அதனை ஆரம்பபுள்ளியாக கருதலாம் என புதுடில்லி தமிழ் கட்சிகளிற்கு வேண்டுகோள் விடுத்திருப்பதற்கும் இதுவே காரணம்.

எனினும் இந்த ஆரம்பகட்ட முயற்சிகளில் மலையக முஸ்லீம்கட்சிகளின் நிலைப்பாடுகள் காரணமாக பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன எனினும் தற்போது புதிய வரைபொன்றை தயாரிக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன அது எந்தவேளையிலும் தயாராகலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.  

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026