நாடு திரும்பும் கோட்டாபய..! தலைநகரில் மீண்டும் வெடிக்கும் போராட்டம்
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தற்போது தாய்லாந்தில் உள்ள நிலையில், அவர் எதிர்வரும் 24 ஆம் திகதி நாடு திரும்புவார் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க நேற்று தகவல் வெளியிட்டிருந்தார்.
அத்துடன், கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று நீண்ட நாட்களுக்கு பின்னர் கொழும்பு கோட்டை பகுதியில் அனைத்து பல்கலைகழக மாணவர்களால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டத்தை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தரை பிரயோகம் மேற்கொண்டதுடன் அனைத்து பல்கலைகழக மாணவ முதல்வர் வசந்த முதலிகே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
நாடு திரும்பும் கோட்டாபய, மீண்டும் வெடிக்கும் போராட்டம், திடீரென கைதான முன்னாள் அமைச்சர் என எமது தளத்தில் முக்கியமான செய்திகளை பலவற்றை இன்று பிரசுரித்திருந்தோம்.
அவற்றுள் சில முக்கிய செய்திகளை நீங்கள் தவறவிட்டு இருக்கலாம். எனவே நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம்.
இராஜதந்திர மார்க்கமாக நாடு திரும்பும் கோட்டாபய..! வெளியான தகவல்
மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நாட்டிலிருந்து வெளியேறிய முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியின் போதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலதிக தகவல் :- இராஜதந்திர மார்க்கமாக நாடு திரும்பும் கோட்டாபய..! வெளியான தகவல் |
கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்..!
அனைத்து பல்கலைகழக மாணவ முதல்வர் வசந்த முதலிகே கைது செய்யப்படுள்ளார். பாலியகொட டி.சி.டி.பி பிரிவினரால் போராட்ட களத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறன்றது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல பல்கலைகழக மாணவர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக தகவல் :- கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்..! வசந்த முதலிகே கைது |
திடீர் கைதிற்குள்ளான மேர்வின் சில்வா..!
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2007ஆம் ஆண்டு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர் இன்று குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
மேலதிக தகவல் :- திடீர் கைதிற்குள்ளான மேர்வின் சில்வாவிற்கு நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!
|
இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா
சீனாவின் உளவு கப்பலை கண்காணிக்க அமெரிக்க அரசு உயர் தொழில்நுட்ப கருவிகளை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீன உளவு கப்பல் வந்துள்ள நிலையில், இந்திய தேசிய பாதுகாப்பிற்கு கடும் அச்சம் நிலவுவதாக இந்தியா கவலை வெளியிட்டது.
மேலதிக தகவல் :- சிறிலங்காவிற்குள் நுழையும் அமெரிக்க இராணுவ செயற்கைகோள்..! இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா |
பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான பிரித்தானிய யுவதி..!
இலங்கையில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான பிரித்தானிய இளம்பெண் ஒருவருடைய வழக்கை மூடி மறைக்க சிறிலங்கா காவல்துறையினர் முயல்வதாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய சமூக ஆர்வலரும், சுற்றுலாப் பயணியுமான Kayleigh Fraser இலங்கை வந்திருந்த நிலையில், தான் பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டதாக கொழும்பு காவல்துறையினரிடம் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
மேலதிக தகவல் :- பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான பிரித்தானிய யுவதி! சிறிலங்கா காவல்துறையினர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு |
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..!
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய ( ஓகஸ்ட் 18 ) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 33 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 70 சதமாகவும் பதிவாகியுள்ளது.
மேலதிக தகவல் :- டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல் |
இலங்கை மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கால அவகாசம்..!
இலங்கை வாழ் மக்கள் கைவசம் வைத்துள்ள வெளிநாட்டு நாணயங்களை வைப்பிலிடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கான கால அவகாசத்தை நிதியமைச்சு அறிவித்துள்ளது .
உள்நாட்டில் உள்ள வெளிநாட்டு நாணயங்களை வங்கித் தொழில் முறைமையினுள் கவர்ந்துகொள்ளும் பொருட்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தபட்டுள்ளது.
மேலதிக தகவல் :- இலங்கை மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கால அவகாசம்! நிதியமைச்சின் முக்கிய அறிவித்தல் வெளியானது |
பரிதாபத்துக்குள்ளான கோட்டாபய..! மனைவியால் கிடைக்குமா வரப்பிரசாதம்
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காய் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்த கோட்டாபய தற்பொழுது மீண்டும் அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கு முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரிய மக்கள் எதிர்ப்பின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, மாலைதீவு, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்றார், அங்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் தற்பொழுது 90 நாட்கள் தங்கியிருக்கும் அனுமதியில் தாய்லாந்து சென்றுள்ளார்.
மேலதிக தகவல் :- பரிதாபத்துக்குள்ளான கோட்டாபய..! மனைவியால் கிடைக்குமா வரப்பிரசாதம்... |