கூட்டமைப்புக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஊடாக முக்கிய தகவல் அனுப்பிய கோட்டாபய
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முக்கிய செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் என கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று விசேட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தைக்காகவே கோட்டாபய தனது இந்த முக்கிய செய்தியை அனுப்பி வைத்துள்ளார். கோட்டாபயவின் செய்தியை இந்திய வெளிவிவகார அமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரச தலைவருக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, கோட்டாபய வழங்கிய ஐந்து முக்கிய வாக்குறுதிகளை கட்டாயம் நிறைவேற்றுவேன் எனவும் அது குறித்து நம்பிக்கை கொள்ளுமாறு கோட்டாபய, இந்திய வெளிவிவகார அமைச்சரின் ஊடாக கூட்டமைப்புக்கு அறிவித்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
