மைதானத்தை திறந்து வைத்து கிரிக்கெட் விளையாடிய கோட்டாபய
srilanka
cricket
political
gotaba
By S P Thas
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச(Gotabhaya Rajapaksha), இலங்கை கிரிக்கெட் அணி வீரர் திசர பெரேராவுடன்(Tissara Perera) கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.
இராணுவத்தின் 72ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு அநுராதபுரம், சாலியபுர கஜபா ரெஜிமெண்ட் தலைமையத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ச கலந்து கொண்டார்.
அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தையும் திறந்து வைத்ததன் பின்னா் கோட்டாபய ராஜபக்ச, இலங்கை அணி வீரர் வீரர் திசர பெரேராவுடன் கிரிக்கெட் விளையாடியமை அனைவரதும் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிகழ்வில், முன்னாள் கிரிக்கெட் வீரரான அஜந்த மெண்டிஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




