வருத்தம் தெரிவித்து சம்பந்தனுக்கு திடீரென கோட்டாபய அனுப்பிய முக்கிய கடிதம்
sri lanka
people
gotabaya rajapaksha
By Shalini
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு பிற்போடப்பட்டமையினால், இடையூறுகள் ஏற்பட்டிருந்தால் அதற்கு தான் வருத்தம் தெரிவிப்பதாக குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், வெகு விரைவில் சந்திப்பிற்கான திகதியை அறிவிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவலை எம்.ஏ. சுமந்திரன் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.
இதேவேனை கடந்த 16ஆம் திகதி ஜனாதிபதிக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற இருந்த சந்திப்பு “பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக ஜனாதிபதி செயலகத்தினால் கூறப்பட்டு” இரத்துச் செய்யப்பட்டிருந்தது.
அந்த வகையில் இரத்துச் செய்யப்பட்ட சந்திப்பு மீண்டும் நடைபெறஉள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி