சுதந்திர தினத்தையொட்டி கோட்டாபயவின் கொள்கை வெளியானது
சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றப்படும் உரையே, அவரது வாழ்த்து செய்தியாக இருக்க வேண்டு்ம் என்பதே, ஜனாதிபதியின் கொள்கை என ஜனாதிபதி ஊடகப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 73வது சுதந்திர தின நிகழ்வு இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், சுதந்திர தினத்திற்கு வழமையாக ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் வாழ்த்து தெரிவிப்பது வழமையாகும்.
எனினும் அரசாங்கம் சார்பில் இந்த முறை பிரதமர் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுதந்திர தினத்திற்கான வாழ்த்து செய்தியை அனுப்பவில்லை.
இந்த விடயம் குறித்து , ஜனாதிபதி ஊடகப் பிரிவின் உயர் அதிகாரியொருவரை கொழும்பு ஊடகமொன்று வினவியது.
அதற்கு பதிலளித்த குறித்த அதிகாரி, சுதந்திர தினத்திற்கு முன்கூட்டியே வாழ்த்து செய்தி அனுப்புவது ஜனாதிபதியின் கொள்கை கிடையாது எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்றப்படும் உரையே, அவரது வாழ்த்து செய்தியாக இருக்க வேண்டு்ம் என்பதே, ஜனாதிபதியின் கொள்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.