கொடுத்த வாக்குறுதியை மூன்று மாதங்களில் முடித்துக்காட்டினார் ஜனாதிபதி கோட்டாபய

srilanka people gotabhaya
By Vasanth Apr 05, 2021 01:53 AM GMT
Report

விமானப் படையினர் நிர்மாணித்த கனுகஹவெவ முன்மாதிரிக் கிராமம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று (04) பிற்பகல் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

கெப்பித்கொல்லாவ “கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்விற்கு வருகை தந்த ஜனாதிபதி மக்கள் முன்வைத்த மனக்குறைகளை செவிமடுத்தார்.

அதன் பின்னர் அவர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற “கிராமத்துடன் கலந்துரையாடல்” நான்காவது நிகழ்ச்சித் திட்டத்திற்காக அநுராதபுரம் நகரத்திலிருந்து 73 கி.மீ தூரத்தில் உள்ள கெபிதிகொல்லாவ பிரதேச செயலக பகுதியில் உள்ள கனுகஹவெவ கிராமம் தெரிவு செய்யப்பட்டது.

கெபிதிகொல்லாவ பிரதேசம் பிரிவினைவாத போரின்போது அடிக்கடி விடுதலைப்புலிகளின்பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான பிரதேசமாகும். 2006 ஜூன் மாதம் 15 ஆம் திகதி ஹல்மில்லவெடிய கிராமத்தில் கெபிதிகொல்லாவ பஸ் வண்டியொன்று புலிப் பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளானதில் கனுகஹவெவ மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 68 பேர் உயிரிழந்தனர்.

1995 முதல் 1998 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை இந்த கிராமங்களில் வசிப்பவர்கள் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக முகாம்களில் வாழ வேண்டி ஏற்பட்டது.

இப்போது அந்த அச்சுறுத்தல் முடிந்துவிட்டாலும் அவர்கள் பல கடுமையான பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

அவர்களின் காணி பிரச்சினைகளை தீர்த்தல், குளங்களை புனரமைத்தல், வீதி அபிவிருத்தி, சுகாதாரம், கல்வி,போக்குவரத்து உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கனுகஹவெவ கிராமத்தில் வீடுகள் உள்ளிட்ட தேவைகளை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன ஏற்றுக்கொண்டிருந்தார்.

கிராமத்தின் விகாராதிபதி , கிராம அலுவலர், பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபைத் தலைவர் ஆகியோருடன் இணைந்து கிராமத்தின் தேவைகளை அடையாளம் கண்டு விமானப்படைத் தளபதியிடம் திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

மூன்று மாதங்களுக்குப்பின் இதை செய்து முடித்த ஜனாதிபதி மீண்டும் கனுகஹவெவ கிராமத்திற்கு சென்று, முதலில் அபிநவாராம விகாரைக்குச் சென்று சமயக் கிரியைகளில் ஈடுபட்டதன் பின்னர் விகாராதிபதி தேரரை சந்தித்து உரையாடினார்.

முன்மொழியப்பட்டிருக்கும் விகாரை நிர்மாணிக்கப்படும் காணியையும் நிர்மாணப்பணிகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

கனுகஹவெவ ஆரம்ப பாடசாலை வளாகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 12 வீடுகள் மற்றும் ஆசிரியர் இல்லத்தின் திறப்புகளை வீட்டு உரிமையாளர்களிடமும் அதிபரிடமும் கையளித்தார்.

கனுகஹவெவ ஆரம்ப பாடசாலையின் விளையாட்டு மைதானம் முன்மாதிரி வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கைத் திட்டம், ஆசிரியர் இல்லம் மற்றும் நடமாடும் கண் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் கண் சத்திர சிகிச்சை என்பவற்றை ஜனாதிபதி பார்வையிட்டார்.

உரிமை இன்றி இதுவரை அரச காணிகளை பயன்படுத்தி வந்த குடும்பங்களுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்கும் திட்டம் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி கனுகஹவெவ கிராமத்தில் 5 குடும்பங்களுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கனுகஹவெவ முன்மாதிரி கிராமத்திற்கு சென்ற ஜனாதிபதி புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஒரு வீடு மற்றும் கனுகஹவெவ முன்மாதிரி கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 15 கிலோ மீற்றர் நீளமான யானை வேலி என்பவற்றையும் பார்வையிட்டார்.

அருகில் இருந்த வீடொன்றுக்கு சென்ற ஜனாதிபதி வீட்டில் இருந்தவர்களுடன் சுமுகமாக உரையாடி விபரங்களை கேட்டறிந்தார். அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, ஷெகான் சேனசிங்க, சன்ன ஜயசுமன, பாராளுமன்ற உறுப்பினர்களான கே.எச்.நந்தசேன,கே..பி.எஸ்.குமாரசிறி, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் ஆகியோரும் விமானப் படை அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026