இலங்கையர்களுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
அனைத்து சமூகத்தினரினதும் நலன்கள் குறித்தும் அரசாங்கம் என்ற ரீதியில், நாங்கள் கவனம் செலுத்துவோம் என அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ் பத்திரன (Ramesh Pathirana) தெரிவித்துள்ளார்.
கொழும்பில நேற்று நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
அனைத்து இலங்கையர்களிற்கும் கௌரவமான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான மக்கள் ஆணை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சில சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் விசாரணைகளின் போது அரசாங்கம் எந்த சமூகத்தையும் விசேடமாக இலக்குவைக்கவில்லை.
இலங்கையில் முஸ்லிம் சமூகத்தினரின் பாதுகாப்பு தொடர்பான உத்தரவாதத்தை அரசாங்கம் உறுதிபட வழங்கியுள்ளது.
நாங்கள் பொறுப்புவாய்ந்த அரசாங்கம், அனைத்து சமூகத்தினரினதும் நலன்கள் குறித்து நாங்கள் கவனம் செலுத்துவோம் என அவர் கூறியுள்ளார்.