காவல்துறை அதிகாரிகளின் சம்பளம் : அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
காவல்துறை திணைக்களத்திற்கு தனியான சம்பள கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (28.02.2025) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எந்தவொரு காவல்துறை அதிகாரியின் அல்லது அரச ஊழியரின் சம்பளத்தையும் குறைக்கவில்லை எனவும், பல வருடங்களுக்குப் பின்னர் அடிப்படை சம்பளத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அடிப்படை சம்பளம்
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் "தற்போது ஒரு காவல்துறை கான்ஸ்டபிளின் அடிப்படை சம்பளம் 29,540 ரூபாய் ஆகும்.
இது இந்த வருடம் 44,293 ஆக உயரும். இது இந்த வருடம் 6,182 ரூபாயால் உயர்கிறது. ஒரு காவல்தறை சார்ஜன்ட்டுக்கு 6,441.54 ரூபாய், ஒரு SI-க்கு 6,551.72 ரூபாய், ஒரு IP-க்கு 7,040.24 ரூபாய், ஒரு CI-க்கு 7,655.74 ரூபாய், ஒரு ASP-க்கு 8,244.11 ரூபாய், SP, SSP-க்கு 9,925 ரூபாய், DIG, சீனியர் DIG-க்கு 11,118 ரூபாய், IGP-க்கு 13,223 ரூபாய் என இந்த வருடம் அதிகரிக்கிறது.
மேலும், ஒரு காவல்துறு கான்ஸ்டபிளின் தற்போதைய அடிப்படை சம்பளம் 29,540 ரூபாய், இது இந்த வருடம் 44,293 ஆகவும், 2026இல் 46,921 ஆகவும், 2027இல் 49,550 ஆகவும் உயரும்.
தற்போது அடிப்படை சம்பளம் 29,540 ரூபாயாக இருக்கும் போது, 2027ஆம் ஆண்டில் அது 49,550 ரூபாயாக உயரும். அதேபோல், இதனுடன் தொடர்புடைய ஏனைய கொடுப்பனவுகளும் அதிகரிக்கும்." என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
