சமுர்த்தி வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் புதிய நடவடிக்கை : வெளியான அறிவிப்பு
Sri Lanka
Government Of Sri Lanka
Prasanna Ranatunga
By Shalini Balachandran
அரசியல் தலையீடுகளாலும் பல்வேறு கோரிக்கைகளாலும் பின்னடைவைச் சந்தித்த சமுர்த்தி இயக்கத்தை புத்துயிர் பெற செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை சமுர்த்தி வங்கியின் தலைமையகம் மற்றும் சமூக வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமுர்த்தி உத்தியோகத்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதிய திட்டமானது “புதிய கிராமம் – புதிய நாடு” என்று பெயரிடப்பட்டுள்ளதுடன் சமுர்த்தி இயக்கத்தை புத்துயிர் பெறுவதற்கான தேசிய வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 16 மணி நேரம் முன்
இதயபூமி எனப்படும் மணலாற்றை பலியெடுத்த பேரினவாதம்…!
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்