போர் வீரர் நினைவேந்தல் : மகிந்தவிற்கு மறுக்கப்பட்ட அனுமதி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (mahinda rajapaksa)தலைமையில் போர் வீரர் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கான கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (sagara kariyawasam)தெரிவித்துள்ளார்.
இருப்பினும்,சிறிலங்கா பொதுஜன பெரமுன இதனை ஒரு தேசிய கடமையாகக் கருதி இந்த மாதம் 20 ஆம் திகதி பிற்பகல் போர் நினைவுச்சின்னத்திற்கு அருகில் போர்வீரர் நினைவேந்தலை நடத்த முடிவு செய்துள்ளதாகவும்,அவர் கூறினார்.
ஜனாதிபதி,பிரதமர் பங்கேற்கவேண்டும்
நாளை நடைபெறும் தேசிய போர் வீரர்கள் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார் என்று ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டதாகவும், அப்படியானால், போர் வீரர்கள் நமக்காக அவர்களது உயிரைத் தியாகம் செய்தது மிகப்பெரிய தவறாகிவிடும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
