அரச பேருந்துகளில் கட்டணம் செலுத்தும் முறையில் ஏற்படவுள்ள மாற்றம்
Sri Lankan Peoples
Transport Fares In Sri Lanka
Sri Lanka Transport Board
By Dilakshan
எதிர்காலத்தில் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) கட்டணங்களை அட்டைகள் மூலம் மட்டுமே செலுத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதனை இலங்கை போக்குவரத்துச் சபை தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார்.
அடுத்த சில மாதங்களில் SLTB சேவையில் இந்தப் புதிய முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் மயமாக்கல்
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் SLTB-யின் டிஜிட்டல் மயமாக்கலையும் பொதுப் போக்குவரத்து சேவைகளில் பெரும் மாற்றங்களையும் பொதுமக்கள் காண முடியும் என்றும் சஜீவ கனகரத்ன மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நடவடிக்கை, இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையை ஒரு புதிய தொழில்நுட்ப சகாப்தத்திற்குள் கொண்டு செல்வதாகக் கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |