கார்த்திகைப் பூ விடுதலைப் புலிகளின் இலச்சினை அல்ல: பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு

Sri Lanka Police Tamils Jaffna Government Of Sri Lanka
By Dhilak Apr 02, 2024 03:02 PM GMT
Report

கார்த்திகைப்பூவை சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகளின் இலச்சினையாகவே பார்க்கிறதாக தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

இதனாலேயே தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டியில் இல்லமொன்றை அழகுபடுத்துவதற்காகக் கார்த்திகைப்பூவை வடிவமைத்த மாணவர்கள் காவல்துறையினால் அறிவிலித்தனமாக விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழில் திரைப்பட பாணியில் அரங்கேறிய சம்பவம்: உயிரிழந்த பெண்ணின் பெரு விரலில் மை

யாழில் திரைப்பட பாணியில் அரங்கேறிய சம்பவம்: உயிரிழந்த பெண்ணின் பெரு விரலில் மை


மிகுந்த முக்கியத்துவம்

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “கார்த்திகைப்பூவை விடுதலைப்புலிகள் தேசிய மலராகத் தெரிவுசெய்திருந்தார்கள் என்பதற்காக அது விடுதலைப்புலிகளை அடையாளப்படுத்தும் பூ அல்ல, அது தமிழ்த்தேசிய இனத்தின் தாயகச் சூழலின் அடையாளம்.

கார்த்திகைப் பூ விடுதலைப் புலிகளின் இலச்சினை அல்ல: பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு | Govt Of Sri Lanka Issue Logo Of Ltte Jaffna

தமிழர்கள் சுற்றுச்சூழலைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்திணைகளாக வகுத்து இயற்கையோடு இசைந்த வாழ்வை மேற்கொண்டு வந்தவர்கள், சங்கத் தமிழர்களால் காந்தள் என அழைக்கப்பட்ட கார்த்திகைப்பூ இப்போதும் தமிழ் வாழ்வுக்கு மிகவும் நெருக்கமான பூக்களில் ஒன்றாகவே இருந்துவருகிறது.

சங்கக்கவி கபிலர் தொடங்கி தாயகக்கவி புதுவை இரத்தினதுரை வரை கார்த்திகைப் பூவைப் பற்றிப்பாடாத புலவர்களே இல்லையென்னும் அளவுக்குத் தமிழ் வாழ்வியலில் கார்த்திகைப்பூ மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

ஈழத்தமிழ்ச் சூழலின் அடையாளம்

இதன் காரணமாகவே இந்தியாவில் தமிழ்நாடு கார்த்திகைப் பூவைத் தனது மாநில மலராகத் தேர்வு செய்துள்ளது.

கார்த்திகைப் பூ விடுதலைப் புலிகளின் இலச்சினை அல்ல: பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு | Govt Of Sri Lanka Issue Logo Of Ltte Jaffna

சிறிலங்கா அரசு தனது பௌத்த பண்பாட்டுச் சூழலுக்கு அமைவாகத் தேசிய மலராக நீலோற்பலத்தையும் தேசிய மரமாக மெசுவா எனப்படும் நாகமரத்தையும் தெரிவு செய்துள்ளது.

இலங்கைக் காடுகளில் ஒருபோதும் காணப்படாத சிங்கத்தைத் தேசியக் கொடியில் வாளேந்த வைத்த பின்னர் அதனால் இதுவரையில் இலங்கைக்குரிய தேசிய விலங்கொன்றைத் தெரிவு செய்ய முடியவில்லை.

இலங்கைத் தேசிய அடையாளங்கள் தமிழ் மக்களை உள்வாங்காது பௌத்த, சிங்களப் பெரும்தேசியவாதத்தின் குறியீடுகளாக அமைந்ததன் விளைவாகவே விடுதலைப்புலிகள் தேசிய மலராக ஈழத்தமிழ்ச் சூழலின் அடையாளமாக விளங்கும் கார்த்திகைப்பூவைத் தெரிவுசெய்ய நேர்ந்தது.

உத்தியோகப்பற்றற்ற தடை

கார்த்திகைப்பூச்செடியிலுள்ள கொல்கிசின் என்னும் நச்சு இரசாயனம் அருமருந்துகளின் தயாரிப்பில் பயன்படுகிறது, இதன் பொருட்டுத் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்படும் கார்த்திகைப்பூச்செடியால் பலகோடி ரூபாய்கள் அந்நியச்செலாவணியாகக் கிடைத்து வருகிறது.

கார்த்திகைப் பூ விடுதலைப் புலிகளின் இலச்சினை அல்ல: பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு | Govt Of Sri Lanka Issue Logo Of Ltte Jaffna

ஆனால், கார்த்திகைப்பூச்செடியின் சிறப்புகளை சிறிலங்கா அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதாலேயே கார்த்திகைப்பூவுக்கு உத்தியோகப்பற்றற்ற தடையைப் பேணிவருகிறது.

இயற்கை அதன் பரிணாமப்பாதைக்குக் குறுக்காக நிற்கும் எதனையும் தூக்கியெறிந்து தன் பல்லினத்தை நிலைநிறுத்தும் பேராற்றல் பெற்றது என்பதை சிறிலங்கா அரசு நினைவிற்கொள்ளவேண்டும்“ எனத் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் அந்நிய சக்திகளின் தலையீடு: போராட்டத்தில் குதித்த மக்கள்

திருகோணமலையில் அந்நிய சக்திகளின் தலையீடு: போராட்டத்தில் குதித்த மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016