ருத்ர தாண்டவமாடும் லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ : எச்சரிக்கும் தீயணைப்புத்துறை
அமெரிக்காவின் (United States) - லொஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) நகரில் பரவி வரும் காட்டத்தீயினால் தற்போது வரை 26 பேர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 07ஆம் திகதி ஆரம்பமான காட்டுத்தீ தற்போது வரையிலும் பல சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. பாலிசேட்ஸில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ, இப்போது 20,000 ஏக்கருக்கும் அதிகமாகப் பரவியுள்ளது.
இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மெல்ல மெல்ல முன்னேறி வருகின்றனர். காட்டுத்தீ கிழக்கு நோக்கி நகர்கிறது.
உலகப் புகழ்பெற்ற கலை அருங்காட்சியகமான கெட்டி மையத்தின் தாயகமான பிரெண்ட்வுட்டில் நெருப்பு பரவும் அச்சுறுத்தல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டமைப்புகள்
கடந்த சனிக்கிழமை (11.01.2025) நிலவரப்படி, லொஸ் ஏஞ்சலிஸ் கவுன்டியில் 153,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதடன், தீ விபத்தில் 12,000க்கும் மேற்பட்ட கட்டமைப்புகள் எரிந்து சேதமடைந்துள்ளன.
அமெரிக்காவின் ,ஈட்டன் காட்டுத்தீ விபத்தில் 7,000க்கும் மேற்பட்ட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதுடன், பாலிசேட்ஸ் காட்டுத்தீயில் 426 வீடுகள் உள்பட சுமார் 5,300 கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது கோர தாண்டவமாடும் இந்த காட்டுத்தீ கலிஃபோர்னியாவின் நான்கு பகுதில் இந்த காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை அதிகாரிகளின் தெரிவித்துள்ளனர்.
காட்டுத்தீ எவ்வாறு பற்றியது
இந்த காட்டுத்தீ எவ்வாறு ஏற்பட்டுள்ளது என்பத பற்றி இது வரையில் உறுதியான தகவல் வெளியாகவில்லை.
மேலும் புலனாய்வாளர்கள் தீ விபத்துக்கான காரணங்கள் குறித்துத் தொடர்ந்து விசாரித்து வருவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பொதுவாக, காட்டுத்தீ ஏற்படுவதற்கு மின்னல் காரணமாக இருக்கும். ஆனால், பாலிசேட்ஸ் மற்றும் ஈட்டன் தீ விபத்துகளுக்குக் காரணம் அதுவல்ல என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதுபோக, காட்டுத்தீக்கு பொதுவான காரணங்களாக அறியப்படும், வேண்டுமென்றே தீ வைப்பது அல்லது மின் இணைப்புகளில் உள்ள சிக்கல்களால் தீ பரவுவது போன்றவை குறித்து அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு நிற கலவை
இதேவேளை தீயை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக, தீயணைப்பு வீரர்கள் சிவப்பு நிற ஒருவகையான கலவையை தெழித்து வருகின்றனர்.
தண்னீர், உப்பு மற்றும் உறங்களின் கலவையாக குறித்த திரவம் காணப்படுதிறது. மேலும் இந்த திரவம் பற்றி எரியும் தீ பிழம்பின் மீது நேரடியாக தெழிக்கப்படுவதில்லை.
மாறாக தீ பரவாமல் இருப்பதற்காக ஒரு தடுப்பாக செயல்படுகிறது. மேலும் இந்த திரவம் ஒக்சிஜன் அளவை குறைத்து தியை கட்டுப்பாட்டிற்கு கொண்டவர ஏதுவாக அமைகிறது.
இந்த திரவம் தெழிக்கப்பட்ட இடங்களை தீயணைப்பு துறையினருக்கு அடையாளப்படுத்துவதற்காக இவை சிவப்பு நிறத்தில் தெழிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |