கட்டுகடங்காத முடி வளர்ச்சிக்கு வாழை இலையை இப்படியும் பயன்படுத்தலாமா!
அடர்த்தியான, முடியை அழகாகவும் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர்க்க ஆசை எல்லோருக்கும் இருக்கின்றது. ஆனால் பல பெண்களுக்கு முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சினைகள் இருக்கும்.
தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.முடி உதிர்விற்கு தீர்வு என பயன்படுத்தும் இரசாயன கலவைகள் முடியை மேலும் பாதிக்கலாம்.
எனவே, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எவ்வாறு பராமரிக்கலாம் என பார்க்கலாம்.
வாழை இலை
வாழை இலை என்பது எல்லோரது வீட்டிலும் இருக்க கூடிய ஒரு பொருளாகும். வாழை இலை ஒரு சிறந்த கிருமி நாசினி. இது உணவில் உள்ள நச்சு தன்மையை நீக்குவதோடு உடலுக்கும் நன்மையை வழங்குகிறது.
வாழை இலையில் சூடான சாதத்தை வைத்து சாப்பிட்டால் முதுமை தலைநரைத்தல் தள்ளாமை போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும்.
அவ்வாறே வாழை இலையின் சாறும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. முதலில் வாழை இலையை நன்றாக கழுவி அதை அரைத்து எடுத்து பின் வடிக்கட்டி வேறு ஒரு பாத்திரத்தில் அதன் சாற்றை மட்டும் எடுத்து தலை முடியில் தடவி, அப்படியே ஊற விடவும்.
இறுதியாக குளிர்ந்த நீரில் முடியை கழுவ வேண்டும். இவ்வாறு ஒரு வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதும் முடி வளர்ச்சி அதிகரிக்கும். மேலும் தலையில் அரிப்பு, சூடு கட்டிகள், எரிச்சல் போன்றவை இருந்தாலும் அதை வாழை இலை சாற்று குணப்படுத்தி விடும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |