'அஸ்வெசும' மூத்த குடிமக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு
Sri Lankan Peoples
Money
Aswasuma
By Sumithiran
'அஸ்வெசும' நலத்திட்ட உதவிகளைப் பெறும் குடும்பங்களில், மூத்த குடிமக்களுக்கும், தபால் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்கள் மூலம் மாதாந்த உதவித்தொகை வழங்கப்படும் என்று தேசிய மூத்த குடிமக்கள் தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உதவித்தொகை பெறவுள்ளவர்கள் 70 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தவிர்ந்த மூத்த குடிமக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் மற்றும் உதவி அஞ்சல் அலுவலகங்களில் உதவித்தொகை
அதன்படி, இதுவரை 'அஸ்வெசும' உதவித்தொகை பெற்று வரும் மூத்த குடிமக்கள், இந்த மாதத்திற்கான உதவித்தொகையை 20ஆம் திகதி முதல் தபால் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்களில் இருந்து பெற முடியும் என்று தேசிய மூத்த குடிமக்கள் தலைமைச் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இந்த மாதம் 1,725,795 குடும்பங்கள் அஸ்வெசும திட்ட கொடுப்பனவுகளை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
