கிளிநொச்சிக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரதமர்
கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் முழுமையாக நன்மையடையும் வகையில் தமிழ்மொழி மூலமான பயிற்சி வகுப்புக்களையும் ஆரம்பிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி(Kilinochchi) அறிவியல் நகரிலுள்ள ஜேர்மன் பயிற்சி நிறுவனத்துக்கு பிரதமர் இன்று (16.02.2025) விஜயம் செய்திருந்த நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன் ஆகியோருடன், ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் அதிபர் மற்றும் பணியாளர்கள் பிரதமரை வரவேற்றுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள்
இதன் பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலில், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவு இளையோர் ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் இணைய முடியாத நிலைமை காணப்படுவதாக மாவட்டச் செயலர் மற்றும் ஆளுநர் ஆகியோர் சுட்டிக்காட்டிள்ளனர்.
ஆங்கிலமொழி மூலமாக பயிற்சிகள் வழங்கப்படுதல் மற்றும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் சித்தியடைந்திருத்தல் என்பன தகைமையாகக் காணப்படுவதால் கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் பலர் இணைய முடியாத நிலைமையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
