மகிந்தவின் உடல்நிலையை பார்த்து கவலை அடைந்த ஹர்ஷன!
அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உடல்நிலையை பார்த்தபோது தனக்கு மிகுந்த கவலை ஏற்பட்டதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் அவர் உயிரிழந்தாலும், அவரை பதப்படுத்தி மேடைகளில் வைத்துக்கொண்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவினர் தயங்கமாட்டார்கள் எனவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வெலிகமவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பேரணியில் உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
அரசியல் நடவடிக்கை
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“மகிந்த ராஜபக்சவை வயது முதிர்ந்த ஒருவராக தான் மதிக்கின்றேன். அவருக்கு நீண்ட ஆயுளை விரும்புகின்றேன். எனினும் அவரை வைத்து தற்போது அரசியல் செய்வது முறையற்றது.

பொதுஜன பெரமுனவின் அரசியல் ஆதரவு 2.5 சதவீத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் மத்தியில் பேசுவதற்கு அந்தக் கட்சியினரிடம் அரசியல் விடயங்கள் எதுவும் எஞ்சியிருக்கவில்லை.
இதன் காரணமாக, உடல்நிலை மோசமடைந்துள்ள மகிந்த ராஜபக்சவை பல்வேறு இடங்களுக்கும் அழைத்துச் சென்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகின்றனர்.
இவ்வாறான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் அரசியல் குழுக்களை மக்கள் முழுமையாக நிராகரிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |