புதிய காணொளியை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய எதிர் கட்சி!!
நாட்டில் கொரோனா நோயாளிகளின் அதிகரிப்பு உயர்வடைந்துள்ளமை தொடர்பான இரகசிய காணொளி ஒன்றினை ஸ்ரீலங்காவின் எதிர்க்கட்சி வெளியிட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இதனை வெளியிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
“மிகவும் வேதனையான விடயம் என்னவெனில் வைத்தியசாலைகளில் நோயாளிக்கான படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. தற்போது உங்களுக்கு ஒரு காணொளியினை காண்பிக்கிறேன்.
இது ராகம வைத்தியசாலையின் தற்போதைய நிலை. இதனைப் போலவே சகல வைத்தியசாலைகளின் நிலையும் காணப்படுகிறது. வைத்தியசாலைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு நிலவுவதனால் நோயாளிகள் நிலத்தில் பாய், துணி, கடதாசி ஆகியவற்றை விரித்து அதன் மேல் துாங்குகின்ற நிலை காணப்படுகிறது.
ஒரு நபரினால் இரண்டு நாளைக்கு முதல் எனக்கு அனுப்பட்ட காணொளி. இவ்வாறு படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் வகையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
படுக்கைகள் அமைப்பது போன்று நோயாளிகளை குறைப்பதற்கான வேலைத்திட்டத்தையும் கொண்டு வர வேண்டும். இதனால் தான் ஒரு வருடத்திற்கு முன்னர் பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.
இதேவேளை பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு அதன் முடிவுகள் வருவதற்கு 07 நாட்டுகளுக்கு மேல் செல்கின்றது. அத்துடன் பரிசோதனையில் நோய்க்கான அறிகுறி சாதகமாக அமையும் போது, நோயாளியை தனிமைப்படுத்துவதற்கு அல்லது சிகிச்சை அளிப்பதற்கு 07 நாட்கள் செல்கின்றன.
இந்த நிலை தொடருகின்ற போது நோயாளி இறந்துவிடுவார் அல்லது குணமைடைந்துவிடுவார். இத்தகைய ஒரு பயங்கரமான சூழ்நிலை தான் நாட்டில் காணப்படுகின்றது” என்றார்.
இதேவேளை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்துவருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் இந்த காணொளி எதிர்தரப்பினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.