400 வகையான மருந்துகள் மருத்துவமனைகளுக்கு விநியோகம்
Ministry of Health Sri Lanka
Drugs
By Kathirpriya
சிறிலங்காவிலுள்ள மருத்துவமனைகளில் மருந்துகளிற்கு நிலவிவந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக ஏறத்தாழ 400 வகையான மருந்துகளை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் கூறினார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சமன் ரத்நாயக்க இந்த மருந்துகள் அவசரகால கொள்வனவுகளின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை
அதுமாத்திரமல்லாமல், இன்னமும் மருத்துவமனைகளில் சுமார் 77 மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், மருத்துவ விநியோகப் பிரிவில் மொத்தம் 231 மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அந்த அதிகாரி மேலும் தெளிவுபடுத்தினார்.
இந்நிலையில், மருந்துகளின் அவசர தேவை கருதி தேவைக்கேற்ப மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.
