நாட்டில் அடுத்த 36 மணித்தியாலத்துக்கு பெய்யவுள்ள கடும் மழை
நாட்டில் ஏற்பட்டுள்ள சீறற்ற காலநிலைானது அடுத்த 36 மணி நேரத்திற்கு தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (18) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையின்படி, அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல சுற்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை
அத்தோடு, பிற்பகல் 2.00 மணிக்கு மேல் ஊவா மாகாணம் மற்றும் முல்லைத்தீவு, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வுத் துறை பொதுமக்களை வலியுறுத்துகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |