நாட்டில் எந்த சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளத் தயார்!! சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம் தகவல்
கொவிட் நிலைமையில், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொவிட் பெருந்தொற்று தொடர்பில் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் இலங்கையில் 21000 கொவிட் மரணங்கள் பதிவாகும் என வொஷிங்டன் பல்கலைக்கழக கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் தகவல் வெளியிடப்பட்டமை குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் அவர்களுக்கு சிகிச்சை வழங்கக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் புதிதாக நோய்த் தொற்றாளர்கள் பதிவாவதனை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.