அமெரிக்காவிடமிருந்து போர்நிறுத்த முன்மொழிவுகள்! ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள அறிவிப்பு
இஸ்ரேலுடனான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, அமெரிக்காவிடமிருந்து இரண்டு போர்நிறுத்த முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பிற்குச் சொந்தமான தொலைக்காட்சி சேவை செய்தி வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்த போர்நிறுத்த உடன்படிக்கை குறித்து ஹிஸ்புல்லா அமைப்பு முதன்முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளதோடு, அவர் முன்வைத்துள்ள ஒரு முன்மொழிவு குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
நிராகரிக்கப்பட்ட முன்மொழிவு
எனினும், இந்த உடன்படிக்கை முழுமையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு போர்நிறுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிடமிருந்து வந்த முதலாவது முன்மொழிவை ஹிஸ்புல்லா நிராகரித்துவிட்டதாக தெரியவருகிறது.
இஸ்ரேல் மீது தாக்குதல்
ஹிஸ்புல்லாவின் பலத்த கோட்டையான பெய்ரூட்டின் தாஹியே பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது என்பதற்கு பதிலாக ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்பதே அந்த முதல் முன்மொழிவாகும்.

இதனை ஹிஸ்புல்லா நிராகரித்து, இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்தியதை அடுத்து, இரண்டாவது முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.
48 முதல் 72 மணி நேரத்திற்குப் பிறகு நடைமுறைக்கு வரவிருக்கும் இந்த இரண்டாவது முன்மொழிவு, ஒட்டுமொத்த தெற்கு லெபனானையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான போர்நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று லெபனான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |