சஜித்தை சந்தித்த கனடா உயரிஸ்தானிகர்! வழங்கிய உறுதிமொழி
Sajith Premadasa
Samagi Jasna Balawegaya
High Commissioner of Canada
By Chanakyan
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இலங்கைக்கான கனேடிய உயரிஸ்தானிகருக்கும் இடையிலான சிறப்புச் சந்திப்பு ஒன்றுஎன ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த சந்திப்பானது எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.
இரு தரப்பினரும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல பிரச்சினைகள், குறிப்பாக உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோய் பரவல் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட ஒரு நாடாக இலங்கையின் சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்கு தேவையான ஆதரவைப் பெறுவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கனடா உயரிஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
கனடா உயரிஸ்தானிகர் இந்த விடயம் குறித்து ஆராய்வதாக உறுதியளித்தார்.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்