பசிலின் செயலால் ஏற்படவுள்ள மோசமான விளைவு -பங்காளி கட்சி கடும் எச்சரிக்கை
நிதியமைச்சர் பசில் ராஜபக்சவினால்(Basil Rajapaksa) வழங்கப்படவுள்ள 229 பில்லியன் ரூபா பாரிய நிவாரணப் பொதியை வழங்குவதற்கு பணம் அச்சிடப்பட்டால் எதிர்காலத்தில் பாரிய பணவீக்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் டியூ குணசேகர(Dew Gunasekera) தெரிவித்துள்ளார்.
இந்த நிவாரணப் பொதியானது பொருளாதார ரீதியிலான முடிவை விட அரசியல் முடிவாகவே தோன்றுகிறது என்றும் அவர் குறிபபிட்டார்.
இந்த நிவாரணப் பொதிகள் இலங்கையில் உற்பத்தி நடவடிக்கைக்கு பயன்படுத்தியிருந்தால், இவ்வளவு பணவீக்கம் ஏற்பட்டிருக்காது என்றும் அவர் கூறினார்.
நாட்டில் இவ்வளவு வலுவான டொலர் நெருக்கடி ஏற்படுவது இதுவே முதல் முறை என்று கூறிய அவர், பணத்தை அச்சடிக்க வேண்டுமானால், நாட்டில் பணவீக்கத்தைத் தூண்டாத வகையில் அச்சிட வேண்டும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.